உள்ளுறுப்புக்களில்  கோளாறுகள் உள்ளதை எவ்வாறு இனம் காணலாம்.

வெளியே  தெரியாத உடல் அவயங்களில் உள்ள  அறிகுறிகளின் மூலம் இலகுவாக இனம்காணலாம் 

எமது உடலமைப்பானது புறக்கண்களுக்கு தெரியும் அவயங்கள் மூலமானது மட்டுமன்றி உள்ளகத்தே பல தொழிற்பாட்டக உறுப்புக்களை கொண்டதாகஇறைவனால் அமைக்கப்பெற்ற ஒரு பொக்கிஷம் ஆகும். எமது கண்களுக்கு புலப்படக்கூடிய வெளி அவயங்களில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் பிரச்சனைகள் தொடர்பில் இலகுவாக இனம் கண்டு அதற்கான தீர்வினை நாம் உடனடியாக மேற்கொண்டு விடுவோம். மாறாக, எமது புறக்கண்களுக்கு தெரியாமல், நம் உயிருடன் இருப்பதற்கென சதா சர்வகாலமும் இயங்கிய நிலையில் இருக்கும் சில உள்ளக அவயங்களில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படுமிடத்து நம்மை பெரிய நோய்களுக்கு அவை இழுத்து செல்லும் என்பதில் ஐயமில்லை.

உடலின் ஸ்திரத்தன்மைக்கும் , எமது மனத்தின் அமைத்திக்கும் தொடர்புடைய அவயங்கள் பலதும் இருப்பின் எமது உடலின் சமிபாட்டு தொகுதியிலேயே அனைத்து செயற்பாடுகளும் ஒன்றித்த தொடர்பினை கொண்டுள்ளது. ஆரோக்கியமான உடல் மற்றும் மனதைப் பராமரிப்பதற்கு குடல் ஆரோக்கியம் முக்கியமானது என்பதை நீங்கள் அறிவீர்களா?

ஒருவரது சமிபாட்டுத்தொகுதி முறையாக செயல்பட்டால், ஒட்டுமொத்த ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். இரைப்பைக் குடல் பாதையானது பல்வேறு முக்கிய செயல்பாட்டைச் செய்யும் நல்ல நுண்ணுயிர்களைக் கொண்டது. இந்த நல்ல பாக்டீரியாக்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தவும், நல்ல மனநிலையை உணர வைக்கும் செரடோனின் என்னும் சுரப்பியானது உற்பத்தி செய்யவும், உணவை ஆற்றலாக மாற்றவும், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் என பல முக்கிய பணிகளைச் செய்கிறது. 

ஆனால் இரைப்பைக் குடல் பாதையில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் கெட்ட பாக்டீரியாக்களால் அதிகரிக்கும் போது தான் நிலைமை மோசமாகின்றன. ஒருவரது குடலில் நல்ல பாக்டீரியாக்களின் அளவு குறையும் போது, உடலினுள் உள்ள பல்வேறு உறுப்புக்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் பாதிக்கப்படும். சொல்லப்போனால், மோசமான குடல் ஆரோக்கியம் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், நோய் எதிர்ப்புச்சக்தி குறைபாடுகள், சர்க்கரை நோய், நாள்பட்ட சோர்வு, பதற்றம், மன இறுக்கம், எக்ஸிமா, சரும அரிப்பு மற்றும் இதர நாள்பட்ட ஆரோக்கிய பிரச்சனைகளுடன் தொடர்பு கொண்டுள்ளது. 

பெரும்பாலானோருக்கு குடலில் உள்ள பாக்டீரியாக்களின் பிரச்சனையினால் தான், இவ்வளவு ஆரோக்கிய பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடுகிறது என்பது தெரிவதில்லை. ஒருவரது குடல் மோசமான ஆரோக்கியத்துடன் இருந்தால், அது ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும்.இவ்வாறு உடலின் ஆரோக்கிய நிலை குறித்த அறிகுறிகள் பின்வருமாறு.

வயிற்று உப்புசம், 

வாய்வுத் தொல்லை, வயிற்றுப் போக்கு அல்லது முறையற்ற குடலியக்கம் போன்றவை மோசமான குடல் ஆரோக்கியத்திற்கான அறிகுறிகளுள் முதன்மையானதாகும். குடலில் உள்ள நல்ல நுண்ணங்கிகள் குறைவாக இருக்கும் போது, உணவுகள் சரியாக செரிக்கப்படாமல், உடலினுள் அதிகளவு வாய்வு உற்பத்தி செய்யப்பட்டு அடிக்கடி வாய்வு வெளியேற்ற வேண்டியிருக்கும். அதோடு அடிக்கடி ஏப்பமும் வரும். சில சமயங்களில் அதிகளவு காபோஹைதரேற்று உணவுகளை உட்கொள்வதாலும் இந்நிலை வரலாம். எனவே உடனே குடலை சுத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபடுங்கள். 

விட்டமின் மற்றும் கனிமச்சத்து குறைபாடுகள்.

சமிபாட்டுத்தொகுதியின் முக்கிய பணியே உண்ணும் உணவுகளை உடைத்து, அதில் உள்ள சத்துக்கள் உடல் செல்களுக்கு வழங்குவது. இந்த ஊட்டச்சத்துக்களைக் கொண்டு தான் செல்கள் வளர்ச்சி அடைவதோடு, தன்னைத் தானே சரிசெய்தும் கொள்கிறது. எப்போது செரிமான மண்டலமானது மோசமாக செயல்படுகிறதோ, அப்போது உணவுகளில் உள்ள சத்துக்களை உறிஞ்ச முடியாமல், ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் அவஸ்தைப்படக்கூடும். பெரும்பாலும் குடல் மோசமாக இருந்தால், விட்டமின் D,K,B12,B7,மக்னீசியம் போன்ற சத்துக்களில் குறைபாடு ஏற்படும். எனவே கவனமாக இருங்கள். 

ஆற்றலின்மை. 

நன்கு தூங்கி காலையில் எழுந்து, ஆரோக்கியமான உணவை உட்கொண்ட பின்பும், மிகுதியான களைப்பை உணர்கிறீர்களா? அப்படியானால் உங்கள் குடல் மோசமான நிலையில் உள்ளது என்று அர்த்தம். வளர்சிதை மாற்றம் என்பது ஒரு சிக்கலான செயல்முறை. இது குடலானது உணவுகளை உடைத்து ஆற்றலை வழங்கும் போது நடைபெறும் செயல்முறையாகும். குடலில் போதுமான நல்ல பாக்டீரியாக்கள் இல்லாத போது, உணவுகளில் இருந்து போதுமான ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படாமல், நாள் முழுவதும் களைப்புடன் இருக்க நேரிடும். ஆகவே நீங்கள் மிகுதியான களைப்பை உணர்ந்தால், உடனே உங்கள் குடலை சுத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபடுங்கள். 

நோய் எதிர்ப்புச்சக்தி குறைதல். 

குடல் ஆரோக்கியம் நோய் எதிர்ப்புச்சக்தி குறைவதனால் ஏற்படக்கூடிய நோய்களான ஆர்த்ரிடிஸ், கிரோன் நோய்கள் மற்றும் லுபஸ் போன்றவற்றுடன் தொடர்புடையது. ஒருவரது குடலில் நல்ல பாக்டீரியாக்களில் ஏற்றத்தாழ்வு ஏற்படும் போது, அவர் நோய் எதிர்ப்புச்சக்தி குறைபாட்டின் தாக்கத்தால் அவஸ்தைப்படக்கூடும். எனவே கவனமாக இருப்பது மிகவும் நல்லது.

சரும பிரச்சனைகள்.

சரும பிரச்சனைகளான முகப்பரு, ரோசாசியா, எக்ஸிமா அல்லது சீரற்ற தோல் போன்றவையும் ஆரோக்கியமற்ற குடலுடன் தொடர்பு கொண்டதாகும். ஒருவருக்கு குடலில் பிரச்சனைகள் இருந்தாலோ அல்லது குடல் ஆரோக்கியமானது மோசமான நிலையில் இருந்தாலோ, அவர்கள் சரும பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படக்கூடும். முக்கியமாக முகப்பரு மற்றும் சொரியாசிஸ் போன்ற பிரச்சனைகள் வருவதற்கு மோசமான குடல் ஆரோக்கியம் தான் காரணம். ஆகவே அடிக்கடி உங்களுக்கு சரும பிரச்சனைகள் ஏற்பட்டால், உங்கள் குடலில் தான் பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். 

சர்க்கரை நோய். 

பெருங்குடல் நுண்ணுயிர் தொற்று மற்றும் டைப்-2 சர்க்கரை நோய்க்கும் இடையே ஒரு வலுவான தொடர்பு உள்ளது. டைப்-2 சர்க்கரை நோய் கொண்டவர்களது குடல் பாக்டீரியாக்களை பார்க்கும் போது, அவர்களது குடலில் உடல் ஆரோக்கியத்தை ஆதரிக்காத விரோதமான பாக்டீரியாக்கள் அதிகளவு இருப்பது தெரிய வந்தது. ஆகவே ஒருவருக்கு திடீரென்று இரத்த சர்க்கரை அளவு அதிகரித்தால், அவர்களது குடல் ஆரோக்கியம் மோசமான நிலையில் உள்ளது என்று அர்த்தம். எனவே கவனமாகஇருங்கள்.

உடல் பருமன். 

உங்களது உடல் எடையைக் குறைக்க முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா? என்ன செய்தாலும் உடல் எடையைக் குறைக்க முடியவில்லையா? அப்படியானால் அதற்கு ஆரோக்கியமற்ற குடல் தான் காரணம். ஆரோக்கியமான உடல் எடையைக் கொண்டோரை விட, உடல் பருமனுடன் இருப்போரின் குடலில் பாக்டீரியாக்களின் அளவு ஏற்ற இறக்கத்துடன் இருப்பது தெரிய வந்தது. இப்படி குடலில் கெட்ட பாக்டீரியாக்களின் அளவு அதிகரிக்கும் போது, அதனால் உண்ணும் உணவுகளை சரியாக உடைத்தெறிய முடியாமல், உணவுகள் செரிமானமாகாமல், உணவுகளில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதில் இடையூறு ஏற்பட்டு, எடை குறையாமல் மாறாக உடல் பருமன் அதிகரிக்கும். 

வாய் துர்நாற்றம்.

வாய் துர்நாற்றம் ஆரோக்கியமற்ற குடலைத் தான் குறிக்கிறது. ஒருவரது வயிற்றில் நல்ல பாக்டீரியாக்களின் அளவில் ஏற்றத்தாழ்வு ஏற்படும் போது, கெட்ட பாக்டீரியாக்களின் பெருக்கத்தால், கடுமையான வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும். இப்படிப்பட்ட வாய் துர்நாற்றத்தை வாய் கழுவும் இரசாயனம் (MOUTH WASH) பயன்படுத்தினாலும் சரிசெய்ய முடியாது. எனவே உங்கள் வாய் கடுமையான துர்நாற்றத்தை ஏற்படுத்தினால், அதற்கு காரணம் உங்களது மோசமான குடல் என்பதை புரிந்து கொள்ளுங்கள். 


சீரற்ற மனநிலை. 

உங்களுக்கு திடீரென்று எரிச்சல், சந்தோஷம், பதற்றம், மன அழுத்தம் மற்றும் மன இறுக்கம் என்று மனநிலை மாறிக் கொண்டே இருந்தால், அதற்கு மோசமான குடலும் ஓர் காரணம். குடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் நச்சுக்களை உற்பத்தி செய்து, இரத்தத்தின் வழியே மூளைக்கு அனுப்பி, மனநிலையில் சமமற்ற நிலையை உண்டாக்குகிறது. நமது உடலில் 70 சதவீதத்திற்கும் அதிகமான அளவு செரடோனின் குடலால் தான் உற்பத்தியாகிறது என்பது தெரியுமா? எனவே உங்கள் மனநிலை சரியில்லாவிட்டால், அதற்கு உங்களது மோசமான குடல் தான் காரணம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

தூங்குவதில் பிரச்சனை. 

படுத்தால் தூக்கம் வருவதில்லையா? அடிக்கடி இரவில் விழிக்கிறீர்களா? அப்படியானால் அதற்கு ஆரோக்கியமற்ற குடல் தான் காரணம். குடல் மோசமான நிலையில் இருந்தால், செரடோனின் அளவு அதிகரித்து, அதனால் தூக்கமின்மை அல்லது தூங்குவதில் பிரச்சனையை சந்திக்க நேரிடும். ஆகவே நீங்கள் தினமும் தூங்குவதற்கு சிரமப்பட்டால், அதற்கு மோசமான குடல் ஆரோக்கியமும் ஓர் காரணமாக இருக்கலாம். ஆகவே உங்கள் குடலை சுத்தம் செய்யும் முயற்சியில் உடனே ஈடுபடுங்கள்.

Article By TamilFeed Media, Canada
1667 Visits

Share this article with your friends.

More Suggestions | Health